காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Collector Arjun Sharma has ordered a holiday for private and government schools in Karaikal due to heavy rains.

புரேவி புயல் காரணமாக காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் புரேவி புயலாகி மாறியது .இந்த புரேவி புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது .தற்போது இந்த புரேவி புயல் காரணமாக புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக ஆட்சியர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார் .