சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் , புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் […]
புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை (30.10.2024) அன்று பொது விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3 […]
குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பெயரில் கொலை வழக்கின் கீழ் இன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் காரைக்கால் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கொலையாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சகாயராணி கொடுத்த குளிர்பானத்தில் உள்ள விஷமும், அதே போல மாணவன் உடற்கூராய்வில் உடலில் இருந்த விஷமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. #SchoolHoliday : Schools in #Puducherry […]
புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் ஏற்கனவே இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் 6-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள […]
காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, […]
விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான். இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொதிக்கவைத்த […]
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள […]
கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை (17-03-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது .அந்த நிலையில் சமீபத்தில் இந்த புரேவி புயலால் பெய்த மழை காரணமாக […]
புரேவி புயல் காரணமாக காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் புரேவி புயலாகி மாறியது .இந்த புரேவி புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு […]
நிவர் புயல் நெருங்கி வருவதால், நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை காரைக்கால் மாமல்லபுரம் இடையேயான கரையை இந்த புயல் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள அனைத்து துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தற்பொழுது […]
நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு காரைக்காலில் […]
காரைக்காலில் ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தில் கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு, தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். காரைக்காலில் உள்ள கீழகாசாகுடி பகுதியில் ஒத்தை பனைமர முனீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலை சுற்றியுள்ள விளை நிலங்களை 35 ஆண்டுகளுக்கு முன்னரே அப்துல்காதர் என்கிற இஸ்லாமியர் விலைக்கு வாங்கிவிட்டார். அந்த சமயத்தில் முனீஸ்வரர் கோவில் சிறிய அளவில் இருந்துள்ளது. அங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் வீடுகள் அதிகமானதால், முனீஸ்வரர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் […]
திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. புதுச்சேரி, திருநள்ளாறு நகராட்சிக்கு உட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஒட்டி ஒருவர் தகராறில் ஈடுபட்டதற்காக திருநாள்ளாறு காவலர்களால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் வசித்து வந்த கிராமம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும், அவரை […]
காரைக்காலில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புதுச்சேரி யூனியனில் காரைக்கால் புறவழிச்சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் அருகே ஒரு வீட்டில் சட்ட விரோதமான போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கலால் மற்றும் காவல்துறையினர், அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையை […]
இலங்கை கடற்படைகளால் தமிழக மீனவர்கள் பலர் துன்புறுத்த படுகின்றனர். அவ்வபோது, அவர்கள் கைது செய்யபடுவதும் பிறகு விடுவிக்க படுவதும். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 69 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் இன்று காரைக்கால் கடலில் வந்து சேர்ந்தனர். source : dinasuvadu.com