புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது . நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய […]
புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சேதங்கள் கடும் சேதமடைந்தன.இந்நிலையில் புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு 3 நாட்கள் பயணமாக மதுரை விமான நிலையம் வந்துள்ளது .மத்திய இணைச் செயலாளர் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கின்றனர். புதன்கிழமையுடன் […]
நிவாரண பொருட்களை வழங்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வெள்ள நீரை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.அந்தவகையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். […]
புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் […]
புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் […]
வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் கடந்த 2 நாட்களாக நிலைக்கொண்டு இருந்த நிலையில், இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் மையம் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The Well Marked Low Pressure Area over […]
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்துள்ள போதும், தற்போது உருவான புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை […]
புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், மன்னார்குடி,நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் பரவலாக பெய்த கனமழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் காணப்படுகிறது.மேலும் புயல் மழையால் பலர் உயிரிழந்தும் உள்ளனர் . நேற்றைய […]
சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவு. கடந்த சில நாட்களாக நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்துள்ளதால், வீடுகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடிசை பகுதியில் வாழும் மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் […]
புரெவி புயலால் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் “புரெவி’ புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புரேவி புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,064 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது .இந்த புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மயிலாடுதுறை, புதுக்கோட்டை, […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.ராமநாதபுரத்திற்கு அருகில் நிலைகொண்டுள்ள இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ராமநாதபுரம் வழியே கடந்து மேற்கு தென்மேற்காக நகர்ந்து தெற்கு கேரளாவை அடையும் என […]
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால், மீனவர்கள் நாளை […]
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புரவி புயல் எதிரொலியையடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நீர் மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி, விருதுகள் பெற்றுள்ளோம் […]
கேரளாவில், புரேவி புயல் எதிரொலியால், திருவனந்தபுர விமான நிலையம் மூடபட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. பாம்பன் பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் புயலை எதிர்கொள்ள கேரள அரசு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் […]
ராமநாதபுரத்திற்கு அருகில் 10 மணி நேரமாக நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை […]
3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் உள்ள நிலையில், அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் அருகே ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வலுவிழந்த புரெவி புயலானது , ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 40 கி.மீ. தூரத்திலும் பாம்பனுக்கு மேற்கு […]
புரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே கரையை கடக்க உள்ளதால், மணிக்கு 50கி.மீ முதல் 60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் […]
புரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவுக்கு மட்டுமே வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய […]