Breaking : சபரிமலை வழக்கு! 5-இலிருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 56 சீராய்வு மனுக்கள் தாக்கல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்தது. இந்த சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வாசித்தனர். 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்ததால் இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்ட்டது.அந்த 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு  தீர்ப்பளிக்கும் வரை அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என தீர்ப்பே அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.