சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிப்பது, மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமைவு இன்று விசாரிக்கிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று துவக்குகிறது. கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. […]
சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்திற்காக அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சென்ற வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் படி சென்றவருடம் கேரளா போலீசின் பலத்த பாதுகாப்பு மூலம் சில பெண்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர். ஆனால், இந்தாண்டு கேரளா அரசு, ஐயப்பன் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் போடப்பட்டன, அதனை 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்ததால், 7 பேர் கொண்ட பெரிய அமர்வு தீர்ப்பு வழங்கும் வரை இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பே அமலில் இருக்கும் என கூறப்பட்டது. இதனையடுத்து, 36 பெண்கள் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்தது. இந்த சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வாசித்தனர். 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்ததால் இந்த […]
பாரத பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று மாலை சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாரத பிரதமர் மோடி பேசியதாவது,கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை வரலாற்றில் மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மிகவும் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்ற பெண் பக்தர்கள் வாவர் மசூதிக்கு வர தடை இல்லை என ஜமாத் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து அங்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் எரிமேலியில் பிரசித்திப் பெற்ற நயினார் மஸ்ஜித் உள்ளது.இதை வாவர் மசூதி என்று அழைப்பார்கள்.வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் […]
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளின் இயக்கம் முடங்கியதால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். கேரளா அரசு […]