#BREAKING: 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு... ரூ.3737 கோடி போனஸ் அறிவிப்பு.!

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2019-20 நிதி ஆண்டுக்கான போனஸ் ரூ.3737 கோடி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.