பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்.!
மகாராஷ்டிராவில் 23 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நவி மும்பையில் வாஷி க்ரீக் பாலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள வாஷி க்ரீக் பாலத்தில் ஒரு பெண் கிடப்பதாக வாஷி ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த காயங்கள் மற்றும் உடலில் காயங்கள் இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வாஷி நகரில் உள்ள என்.எம்.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ அதிகாரி அவளை பரிசோதித்து ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றினார்.
தற்போது, சம்பவம் குறித்து விசாரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மீது 307 (கொலை முயற்சி) மற்றும் 376 (கற்பழிப்பு) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்த ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி காட்சிகளையும் புலனாய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.