டெல்லி : தீபாவளியை முன்னிட்டு, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில், எளிதில் தீப்பற்ற கூடிய அல்லது பட்டாசுப் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது, ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67 இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 164 மற்றும் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. […]
சென்னை : சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று (15-10-2024) நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில், முழுமையாக ரத்து. திருப்பதியில் மாலை 6.05-க்கு புறப்படவுள்ள 16058 சென்னை சென்ட்ரல் ரயில், முழுமையாக ரத்து. சென்னை சென்ட்ரலில் இரவு 9.15-க்கு புறப்படவுள்ள 16021 மைசூர் காவேரி ரயில், […]
சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை […]
ஜார்கண்ட் : சக்ரதர்பூர் அருகே ஹவுராவில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயில் தடம்புரண்டது. ஹோவாரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ஜாம்ஷெட்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் படபாம்பூ அருகே அதிகாலை 3.45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. தடம் புரண்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில், 2 பேர் பலி, 20 பேர் […]
மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவு 2,424 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்கீழ், பல்வேறு பணிகளுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட் உள்ளிட்ட காலி இடங்களுக்கு அப்ரண்டிஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு (ஆர்ஆர்சி) அதிகாரப்பூர்வ இணையதளமான rrccr.com இணையதளத்தில் ஆகஸ்ட் 15வரை விண்ணப்பிக்கலாம். […]
அசாம் : மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை மீது அந்த வழியாக வந்த கஞ்சன்ஜங்கா ரயில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை, நடக்க முடியாமல் தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்து இறந்தது. மோரிகானின் தெகெரியா பகுதியில் காட்டு யானை ரயில் பாதையை கடக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டு யானை ரயிலில் […]
தெலுங்கானா : காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயிலின் என்ஜின் முன், முதியவரின் உடல் பிணமாக தொங்கியபடி உள்ளது. காந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர் சுமார் 65-70 வயதுடையவர் என்றும், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட GRP இன் புலனாய்வு […]
மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரிப்பு என ராகுல் காந்தி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் […]
மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. தற்போது வரை இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது தற்பொழுது, ஜல்பைகுரியில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசின் அலட்சியம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மேற்குவங்க ரயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது. நாட்டில் ஒரு பக்கம் […]
மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டு, அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த சூழலில், […]
மேற்குவங்கம் : ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டு, அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை […]
தெற்கு ரயில்வே : ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஏசி (AC) சிறப்பு ரயில்களை அறிவித்து பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக இயக்கப்படவுள்ள அந்த ரயில்கள் தாம்பரம் மற்றும் மங்களூரு சந்திப்பை இணைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவைகள் ஜூன் மற்றும் ஜூலை 2024 தொடக்கத்தில் இயக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. தாம்பரம்-மங்களூரு AC சிறப்பு ரயில்: தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (எண் 06047) : இந்த சிறப்பு ரயில் வெள்ளி […]
சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழக அரசு. அதற்காக 1000 தேர்வர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு ஒன்று ஜூலை 14ல் நடைபெற உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நடத்தப்படும் போட்டித் தேர்வை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் […]
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு […]
பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து ஜனவரி ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிப்பு. பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து ஜனவரி ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஒரு வாரத்திற்கு மேல் சிறப்பு பணிகள் நடந்து வருகின்றன. காலிபெட்டிகளுடன் ரயிலை இயக்கி சென்னை ஐஐடி வல்லுநர்கள் செய்த ஆய்வு […]
நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், டிசம்பர் 6-ஆம் தேதி நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என […]
மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 12 பேர் காயமடைந்தனர். புனே நோக்கிச் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக ஏராளமான பயணிகள் மேம்பால நடைமேடையை பயன்படுத்திய போது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தநேரத்தில் ரயில் மேம்பால நடைமேடையின் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது ஸ்லாப் விழுந்ததில் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய ரயில்வே 310 நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் மூலம் நிர்வகிக்கப்படும் 310 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இ-டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது ஆப்,கால் சென்டர்,இணையதளம் அல்லது அழைப்பு எண் 1323 ஐப் பயன்படுத்தி பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம்.
செப்டம்பர் 2022க்கான அரசுத் தேர்வுகள் காலண்டர். இந்த மாதம் சில முக்கிய SSC, ரயில்வே, UPSC, மாநில PCS, வங்கி, கற்பித்தல்/TET, பாதுகாப்பு மற்றும் பிற அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது. எனவே, தேர்வர்களின் எளிமைக்காக, செப்டம்பர் 2022ல் நடைபெறவிருக்கும் அரசுத் தேர்வுகளின் பட்டியலை இங்கு காண்போம். அரசு தேர்வு பெயர் தேர்வு தேதிகள் அசாம் ரைபிள்ஸ் 2022 தேர்வு செப்டம்பர் 1 முதல் IBPS கிளார்க் பிரிலிம்ஸ் 2022 தேர்வு 3 மற்றும் 4 செப்டம்பர் […]