மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது, அதில் பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. திருமாவளவன் குற்றச்சாட்டு தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ எனவும், இதற்கு […]
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி யும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன. மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இடையே காலை போட்டி நடந்து வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வெளிட்டு இருக்கும் தகவலின் படி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் […]
டெல்லி : முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்களை அடுத்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில தேர்தல் விவரங்கள் : மொத்த தொகுதிகள் : 81. மொத்த வாக்காளர்கள் – 2.6 கோடி. முதற்கட்ட தேர்தல் (43 தொகுதிகள்) : வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024. வேட்புமனு நிறைவு – 25.10.2023. வேட்புமனு வாபஸ் […]
புனே : மகாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை 6:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மூன்று பேரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என தெரிய வந்துள்ளது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் […]
மகாராஷ்டிரா : மும்பையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை வெறும் மூன்று மணி நேரத்தில் 131 மிமீ மழை பெய்த புனேக்கு IMD ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், புனே மெட்ரோவின் புதிய வழித்தடத்தையும், நகரின் பிற வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவிருந்தார். தொடர் கனமழை காரணமாக மோடியின் […]
மகாராஷ்டிரா : பால்கரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது குறித்து தான் மன்னிப்பு கேட்டுகொள்கொள்வதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையானது, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி […]
மகாராஷ்டிரா : மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பையில் இருந்து ஐதராபாத் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில், பலி எதுவும் ஏற்படவில்லை. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரின் நிலை […]
மகாராஷ்டிரா : மாநிலத்தின் துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் ரீல்ஸ் செய்யும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் ஒரு நிமிட நீளமான வீடியோவில், பைக்கில் இருவரும் ஹெல்மெட் இல்லாமல் – நெடுஞ்சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது பின்புறம் அமர்ந்து இருந்தவர் ரீல்ஸ் […]
ஜிகா வைரஸ் : மகாராஷ்டிராவின் புனேவில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது, ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களில் ஜிகா வைரஸ் கருவில் மைக்ரோசெபாலியை (அசாதாரண மூளை வளர்ச்சியால் குறிப்பிடத்தக்க அளவு சிறியதாக இருக்கும் நிலை) ஏற்படுத்துகிறது. டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளை பரப்பும் ஏடிஸ் […]
மகாராஷ்டிரா : மல்காபூரில் உள்ள குத்ரா புத்ருக் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதிய அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மெரூன் நிற கார் ஒன்று அதன் பாதையில் இருந்து சற்று விலகி சாலையோரம் நடந்து செல்லும் முதியவர் மீது மோதியதை காட்டுகிறது. சீராக வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியது பார்ப்பதற்கு சோகத்தையும் வேதனையும் ஏற்படுத்துகிறது. அது வீடியோவில் […]
மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது […]
மகாராஷ்டிரா : புனேயில் ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர், தனது ஜிம்மில் இருந்து 32 பேர் கொண்ட குழுவுடன், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு மிக அருகில் உள்ள தம்ஹினி காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அங்கு நீர்வீழ்ச்சியில் குதித்த ஸ்வப்னில் தாவ்டே, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் காணவில்லை. இதற்கு முன்னதாக, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த நபரின் 10 வயது […]
மகாராஷ்டிரா : மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையில் கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகே இரண்டு கார்கள் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று பல பொருட்களை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் தவறான வழியில் சென்று நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த எர்டிகா காரின் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் எர்டிகா கார் காற்றில் வீசப்பட்டது, நெடுஞ்சாலையின் தடுப்பில் தரையிறங்கியது, […]
மகாராஷ்டிரா : டோம்பிவிலியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் வேதனை அடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. தானே நகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டோம்பிவிலி மன்படா காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி உமாபாரதி என்ற பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அந்த […]
மகாராஷ்டிரா : காரை ரிவர்ஸ் செய்யும் போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பாஜி நகரில் உள்ள ஹனுமன்நகரைச் சேர்ந்த 23 வயதான ஸ்வேதா தீபக் தனது காரை எடுத்துக்கொண்டு சுலிபஞ்சன் மலையில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரீல்ஸ் மீது உள்ள ஆர்வத்தில் தன்னுடன் வந்த தனது நன்பர் 25 வயது நண்பர் சூரஜ் சஞ்சாவிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்க […]
மக்களவை தேர்தல் : 543 லோக்சபா இடங்களுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதில், பாஜக 240 இடங்களையும், காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனிடையே, மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைகருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணி வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், வைகர் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். […]
மும்பை : மீரா சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே போட்டி நடைபெற்றது. அப்போது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நிலையில், சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்துக்கு தயாராக இருந்த அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். मुंबई के […]
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது இந்நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக, தற்காலிக ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி […]
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி […]
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் […]