ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது – சல்மான் குர்ஷித் அறிவிப்பு
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவிப்பு.
இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதிருந்தார். அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால், தேச நலனை கருத்தில் கொண்டு நடைப்பயணத்தை ஒத்திவையுங்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும், ஆனால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனிமனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.