பலவீனத்தை திசைதிருப்ப ராகுல் காந்தி முயற்சி – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி!

ராகுல் காந்தி தனது தோல்வி, பலவீனங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஆணையம் மீது குற்றம்சாட்டுகிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Kiren Rijiju Rahul Gandhi

டெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இன்று (நவம்பர் 5, 2025) டெல்லியில் ‘THE H Files’ என்ற தலைப்பில் செய்தியாளர் சந்திப்பில், “2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் போலி வாக்குகள். ஒரே பெண்ணின் புகைப்படத்துடன் வெவ்வேறு பெயர்களில் 22 தடவை வாக்கு பதிவு. தபால் வாக்குகள் மற்றும் EVM வாக்குகளுக்கு தொடர்பே இல்லை” என்று ஆதாரங்களை வெளியிட்டார்.

“காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறுவதைத் தடுக்க சதி நடந்தது. 5 கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி கூறியபோது, பாஜகவின் நயாப் சைனி ‘vyavastha’ என்று சிரித்தது சதியின் அறிகுறி” என்று வீடியோ காட்டினார். Gen Z இளைஞர்களை எச்சரித்து, “உங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காகவே இதைச் செய்கிறேன்” என்றார்.

இதனையடுத்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுலின் குற்றச்சாட்டுகளை “எல்லையில்லாத பொய்” என்று கடுமையாக விமர்சித்தார். “ராகுல் காந்தி தோல்வி முகத்தை மறைக்க நாடகம் நடத்துகிறார். பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு ஹரியானா முடிவுகளை வைத்து கதை அளக்கிறார்” என்று கூறினார். “தோல்வி, பலவீனங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்ப தேர்தல் ஆணையத்தை அவமதிக்கிறார். EVM மீது பழி போடுகிறது காங்கிரஸ்” என்று சாட்டினார். “பாஜக மட்டுமல்ல, நாட்டின் அமைப்புகள், ஜனநாயகத்தை தாக்குகிறார் ராகுல். ராணுவம், உச்சநீதிமன்றம் என அடுத்து தாக்குவார்” என்று எச்சரித்தார்.

ரிஜிஜு, “ராகுலின் பிரசன்டேஷன் முற்றிலும் போலி. சட்டமன்ற அமர்வின் போது வெளிநாடு சென்று தாய்லாந்து-கம்போடியாவில் இருந்து உத்வேகம் பெறுகிறார்” என்று தாக்கினார். “நாங்கள் பல தேர்தல்களில் தோற்றோம், ஆனால் தேர்தல் ஆணையத்தை திட்டவில்லை. ராகுல் ஒவ்வொரு முறையும் அழுது கொண்டு மக்கள் நேரத்தை வீணடிக்கிறார்” என்று கூறினார். பீகார் தேர்தலுக்கு முன் கவனத்தை திசைதிருப்ப முயல்கிறார் என்று சாட்டினார்.ரிஜிஜு, பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை மக்களால் வரவேற்கப்படுவதாகக் கூறினார்.

மேலும், “வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்புக்கு இது அவசியம். SIR நடந்த இடங்களில் மக்கள் மகிழ்ச்சி. ராகுல் அநாவசிய ஹங்காமா செய்கிறார்” என்றார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் போலிங் ஏஜெண்ட், அப்சர்வர் இருப்பதால் மோசடி வாய்ப்பில்லை என்று விளக்கினார். ரிஜிஜு, “ராகுல் ஜனநாயகம், நீதி அமைப்பில் நம்பிக்கை இல்லை. மோசடி இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள், பத்திரிகை சந்திப்பு நடத்தாதீர்கள்” என்று அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, வெளிநாடு சென்று இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார். “ஜனநாயகத்தில் வெற்றி-தோல்வி இயல்பு. ஆனால் ராகுல் ஒவ்வொரு முடிவிலும் அமைப்புகளை கேள்வி கேட்கிறார்” என்று கூறினார்.முடிவாக, ராகுலின் குற்றச்சாட்டுகள் ஹரியானா தேர்தல் முடிவுகளை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளன. ரிஜிஜு, இதை “நன்கு திட்டமிடப்பட்ட சதி” என்று கூறி, உள்நாடு-வெளிநாட்டு சக்திகள் ராகுலை பயன்படுத்தி இந்தியாவின் பிம்பத்தை சேதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். பீகார் தேர்தல் முன்னர் இந்த விவாதம் அரசியல் அலைவீச்சை ஏற்படுத்தியுள்ளது.