தசாரா கொண்டாட சென்ற மக்கள்……..கொன்று குவித்த ரயில்…….மோதி விபத்து…….50 பேர் பலி….!!!

Default Image
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையான ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Image result for punjab train accident today
நாடுமுழுவதும் தசாரா பண்டிகை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த நிகழ்வானது  அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது.
இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்த நிலையில். ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். இந்நிலையில் ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.
Image result for punjab train accident today
இந்த பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் சத்த கேட்கமால், ரயிலையும் மக்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது. அப்போதுவேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.

இந்நிலையில் தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு, உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கடந்தன. இந்த கொடூர விபத்தில் கிடைத்த முதல் கட்ட தகவலின்படி 50-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் விபத்து நடந்த ரயில் பாதை முழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால், மனித உடல்கள் எங்கெல்லாம் சிதறிக்கிடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்து மீட்புப்பணியில்ஈடுபட்டுள்ளனர். ஆனால், எத்தனைப் பேர் பலியானார்கள், காயமடைந்தனர் என்ற முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இந்த விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், ரயில்விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்