பஞ்சாப் : இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல்!

8 pockets of heroin seized by border guards at India-Pakistan international border in Punjab

பஞ்சாபில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள நெல் வயலில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான எட்டு பாக்கெட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த பாக்கெட்டுகளில் போதை பொருள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் குச்சி வடிவில் இருந்ததாகவும், மூன்று மஞ்சள் நிறத்திலும், ஐந்து வெள்ளி நிறத்திலும் இருந்ததாகவும் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இது போன்று மேலும் இரண்டு முறை இவ்வாறு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.