சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே கபடி போட்டி நடந்தது. அப்போது, பவுல் அட்டாக் தொடர்பாக நடுவரிடம் தமிழக வீராங்கனை புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனைகள் மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வீராங்கனைகளை நடுவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை […]
சென்னை : பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகளை தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகள் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆன போட்டிக்காக பஞ்சாப் குருகிராமுக்கு சென்று இருக்கிறார்கள். குருகாமில் யுனிவர்சிட்டிகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டியில் பங்கேற்ற அன்னை தெரசா யுனிவர்சிட்டி மாணவிகள் மீது நாற்காலிகளை வீசி கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டியின்போது நடுவர் […]
பஞ்சாப் : அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சருமான சுக்பீர் சிங் பாதல் தங்கள் சீக்கிய மத அடிப்படையில் மத ரீதியிலான தண்டனை தொடர்பாக பஞ்சாப் அமிர்தரசிலில் உள்ள பொற்கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டும், பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார். இன்று காலையில் பொற்கோவில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதலை நோக்கி ஒரு முதியவர், தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சுட முயற்சித்தார். நல்வாய்ப்பாக இதனை கவனித்த அருகில் இருந்த நபர் […]
டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]
இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில், டெஹ்ரா […]
பஞ்சாப் : சமீபகாலமாக பஞ்சாபில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அமிர்தசரஸில் ஒரு பெண் நடுரோட்டில் போதையில் சுயநினைவை இழந்து நின்று கொண்டு இருந்த அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) படி, பஞ்சாபில் கிட்டத்தட்ட 35% குடும்பங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பிரச்சினை நீண்டகாலமாக பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை […]
பஞ்சாப் : சண்டிகரின் எலன்டே மாலில் பொம்மை ரயில் கவிழ்ந்து ஷாபாஸ் என அடையாளம் காணப்பட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக. இச்சம்பவம் ஜூன் 22 (சனிக்கிழமை) நடந்துள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சண்டிகரில் உள்ள எலண்டே மாலில், பொம்மை ரயில் கவிழ்ந்து, நவன்ஷாஹரைச் சேர்ந்த ஷாபாஸ் என்ற 11 வயது சிறுவன் இறந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. CCTV visuals […]
பஞ்சாப்: வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது. இந்த 7ஆம் கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஞாயிறு) பஞ்சாப், லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்ய […]
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த […]
நாடாளுமனற மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போயிட்டிடும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். பீகார், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை […]
பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கன்னா பகுதி அருகே எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மேம்பாலத்தில் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர். இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிலைமை கட்டுக்குள் […]
பஞ்சாப்பில் இன்று விடுமுறை அறிவித்தது அம்மாநில அரசு. பஞ்சாப் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 28) விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், வாரியங்கள்/கார்ப்பரேசன்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு கோவிந்த் சிங்கின் தாய் மற்றும் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் ஃபதேகர் சாஹிப்பில் மூன்று நாள் ஷஹீதி ஜோர் மேளாவை குறிக்கும் வகையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி மதுபானங்களை கண்டறிய, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு தற்போது சிட்டிசன் செயலி (CITIZEN APP) மூலம் போலி மதுபானங்களை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும். அந்த QR கோடை சிட்டிசன் செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்த்தல் அதன் உண்மை தன்மை தெரிந்து விடும். இதன் மூலம் பஞ்சாபில் உலவும் […]
பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த […]
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஓடும் ஆட்டோவில் செவிலியரை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க அவர் ஆட்டோவில் இறுத்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியரை ஆட்டோவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. அதிலிருந்து தப்பிக்க அந்த செவிலியர் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியர் ஒருவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்கையில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளி பாலியல் பலத்காரம் செய்ய முயன்றுள்ளார். பாலியல் […]
தேர்தலில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என பஞ்சாப் முதல்வர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரச்சரம் செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். இந்த வேளையில், இன்று காலை, பாட்டியாலா புறவழிச்சாலையில் போராட்டக்காரர்கள் திரண்டு, பேரணியாக பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருக்கும் முதலமைச்சரின் வீட்டை நோக்கி செல்லஆரம்பித்தனர். போராட்டக்காரர்கள், ஆம் ஆத்மி தேர்தலின் போது […]
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேஸ் குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சூட்கேஸில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக அரசு ரயில்வே காவல்துறையின் ஏசிபி கூறுகையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் […]
சிவசேனா தலைவர் சுதிர் சூரி என்பவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில் சுட்டு கொல்லப்பட்டார். சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுதிர் சூரி, இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில், கோபால் மந்திர் எனும் இடத்தில் ஓர் கோவிலுக்கு எதிரே போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்டார். சுடப்பட்டு காயமடைந்த சுதிர் சூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். இவரை சுட்ட சந்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் […]
புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி மற்றும் பஞ்சாபில் 35 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ தரப்பில் ஏற்கனவே அவருக்கு நெருக்கமான இடங்களில் சோதனை நடைபெற்று, மணீஷ் சிசோடியா உட்பட […]