டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) அன்று ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து, குழுவின் இரண்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். பீகாரின் முசாபர்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அபிஷேக் ராஜா மற்றும் நிஜாமுதீன் என தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகளிடமிருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் மற்றும் […]
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. முந்த்ரா துறைமுகத்தில் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை(ஏடிஎஸ்) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) நடத்திய கூட்டு சோதனையின் போது ₹350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக துணி ரோல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கடத்தல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து அனுப்பப்பட்டு பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று குஜராத் […]
டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரூ.100 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருள்கள் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (என்சிபி) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக,NCB இன் டைரக்டர் ஜெனரல் SN பிரதான் கூறுகையில், “நார்கோ-டெரரிசத்துக்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. இந்த நெட்வொர்க் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே போதை-பயங்கரவாதத் […]
குஜராத் மாநிலத்தில் 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி கே.கே.படேல் கூறுகையில், 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல நேற்று இரண்டு கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. […]
பஞ்சாபில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள நெல் வயலில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான எட்டு பாக்கெட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த பாக்கெட்டுகளில் போதை பொருள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் குச்சி வடிவில் இருந்ததாகவும், மூன்று மஞ்சள் நிறத்திலும், ஐந்து வெள்ளி நிறத்திலும் இருந்ததாகவும் எல்லை […]
மும்பையில் 15 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தி சென்ற இருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் வசித்து வரக்கூடிய இந்த இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதை பொருளை கடத்தி விற்பனை செய்வதற்காக மும்பை வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் மும்பை போதை பொருள் […]
குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போதுடால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள […]