பரபரப்பு .!போலீசார் அனுமதி தராததால் ஸ்கூட்டியில் சென்ற பிரியங்கா காந்தி.!

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி கைது செய்யப்பட்டார்.
- அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க பிரியங்கா சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி தொடர்ந்து சென்றார்.
சமீபத்தில் இரண்டு மோசோதாவிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் , குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடந்த போராட்டத்தில் சில இடங்களில் வலுவடைந்து வன்முறை வரை சென்று உள்ளது . இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும் , கன்னிப்புகை வீசியும் கலைத்தனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (வயது 76) கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (கிழக்கு) பிரியங்கா காந்தி நேற்று காரில் சென்றார். ஆனால் அவரை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி தொடர்ந்து சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025