2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை சந்தித்த பின்

Modi Russia Visit

பிரதமர் மோடி :மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை சந்தித்த பின் ஆஸ்திரியாவுக்கும் செல்ல உள்ளார். இப்போது, ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினுடன் 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டை மோடி நடத்துகிறார். இதுவரை இந்தியாவிலும் ரஷ்யாவிலும் 21 ஆண்டு உச்சி மாநாடுகள் மாறி மாறி நடந்துள்ளன.

இந்த் உச்சிமாநாட்டின் போது, ​​இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மூன்று நாள் பயணம் குறித்து அவரது எக்ஸ் பதிவில், ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இப்பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும் என்றும், இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

unknown node