பெண்களே உஷார்! பிரஷர் குக்கரை சரியாக கவனிக்காததால் கண்ணை இழந்த பெண்!

பெண்கள் வீட்டில் சமையல் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. தங்கள் வீட்டின் சமையலறையில் உள்ள கேஸ் அடுப்பு சரியான முறையில் உள்ளதா என்பதை கவனிப்பது மட்டுமல்லாமல் தான் பயன்படுத்தும் பிரஷர் குக்கர் சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்ப்பதும் மிக முக்கிய ஒன்றாகும். அப்படி தன் வீட்டு பிரஷர் குக்கரை சரியாக கவனிக்காததால் ஜார்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது இடது கண் பார்வையை இழந்தார்.
அந்தப் பெண் தனது வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது பிரஷர் குக்கரில் பருப்பை வேக வைத்துள்ள அந்த பெண், தன்வீட்டு தோட்டத்தில் வேலை செய்துள்ளார். பின்னர் சமையலறைக்கு வந்து, அந்த குக்கர் எடுத்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதிக ப்ரஷாருடன் குக்கர் விசில் எதிர்பாராதவிதமாக அவரது கண்ணுக்குள் சென்றது. பின்னர் வலியால் துடித்த அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவரது தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் குக்கர் விசில், அந்த பெண்னின் இடது கண்ணின் வழியாக புகுந்து மூளை வரை சென்றுள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அந்த விசில் அகற்றப்பட்டது. ஆனாலும் அந்த பெண்ணுக்கு இடது கண் பார்வை பறிபோகியுள்ளது.
பெண்கள் சமையல் பொருட்களையும், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது, தற்போதைய காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025