யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம்-பிரகாஷ் ஜவடேகர்
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்கவே விரும்புகிறோம். மக்கள் கருத்துகளை கேட்ட பின்பே கல்விக்குழுவின் வரைவு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.