பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா மருத்துவமனைக்கு நிதியளிக்கவுள்ள PM கேர்ஸ்.!

பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் இன்று கூறியுள்ளது.

இந்நிலையில்,  DRDO பாட்னாவிலும், முசாபர்பூரிலும் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா Makeshift மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிதவித்துள்ளது.

பாட்னாவின் பிஹ்தாவில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இன்று திறக்கப்படும் என்றும், முசாபர்பூரில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அடுத்த ட்வீட்டுகளில் பி.எம்.ஓ தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனைகளில் 125 ஐ.சி.யூ படுக்கைகள் வென்டிலேட்டர்கள் மற்றும் 375 சாதாரண படுக்கைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்ஸிஜன் சப்ளை உள்ளது. மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆயுதப்படை மருத்துவ சேவைகளால் வழங்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களில் சட்டசபை தேர்தலுக்கு செல்லும் பீகார், அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ஆகஸ்ட் -11 ம் தேதி நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில், பீகார் உட்பட 10 மாநிலங்கள் நாட்டின் மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்றுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

unknown node