சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல் (தை 1) கொண்டாடப்படுகிறது. அதே போல, வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் விதமாக சத் பூஜையானது (Chhat Puja) ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொண்டாப்படுகிறது. முதலில் பீகார், உத்திர பிரதேசம், நேபாளம் ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகையானது தற்போது பெரும்பாலான வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சென்னை பகுதியில் வசிக்கும் […]
பீகார் : கடந்த சில நாட்களாக நம் அண்டை நாடான நேபாளத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பீகாரிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பீகார் எல்லையில் உள்ள தடுப்பணையிலிருந்து லட்சக்கணக்கான கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பீகாரில் உள்ள முக்கிய நகரங்கள், கிராமங்கள் என மொத்தம் 16 மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 10 லட்சம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும், ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட […]
பீகார் : கேம் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இளைஞர் ஒருவர், சாவி, கத்தி, நக வெட்டிகளை விழுங்கியதால் பரபரப்பை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞன், (பிஜிஎம்ஐ) என்ற ஆன்லைன் மொபைல் கேமை இடைவிடாமல் விளையாடி வந்துள்ளார். வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அந்த கேமை விளையாட இடைவிடாமல் விளையாடி வந்ததால், அவரது குடும்பத்தினர் மொபைல் போனை புடுங்கி வைத்து கேம் விளையாட அனுமதி மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சாவிக் கொத்து, 2 நக […]
பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது. போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார். நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு […]
டெல்லி: வேலைக்கான உத்தரவிட்ட தேதியில் இருந்து தான் பதவி உயர்வு கணக்கிடப்படுமே தவிர காலிப்பணியிடங்கள் அறிவித்த தேதியில் இருந்து பதவி உயர்வு கணக்கிடப்பட மாட்டாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. பீகார் மாநிலம் மின்சார வாரியத்தில், கடந்த 1976ஆம் ஆண்டு ஒரு நபர் உதவியாளர் பணியில் சேர்க்கப்படுகிறார். அந்த நபர் மாற்றுதிறனாளி மற்றும் பட்டியலின இடஒதுக்கீட்டின் படி, அடுத்தடுத்த பதவி உயர்வுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்சார வாரியத்தால் பணியமர்த்தப்படுகிறார். அந்த சமயம் , அடுத்து 1991ஆம் ஆண்டு […]
டெல்லி: நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் அறிவிக்கப்படாததை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதில் பொதுவான அறிவிப்புகளை தவிர்த்து, NDA கூட்டணி கட்சிகளின், பீகார் (நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் ஆந்திரா (சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்) மாநிலங்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, […]
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ்,தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க்கு தேசம் (ஆந்திரா), நிதிஷ்குமரின் ஐக்கிய ஜனதா தளம் (பீகார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]
மத்திய பட்ஜெட் 2024 : மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக இந்த முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து என்டிஏ தலைமையிலான கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. இதன் காரணமாக தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலங்களுக்கு இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது அதனை மத்திய […]
இடைத்தேர்தல் முடிவுகள் : 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன. கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்ற அதே நாளில் வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் ஜூலை 10 அன்று நடைபெற்று முடித்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை மணி முதல் எண்ணப்படுகின்றன. இதில் […]
பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக வெளியாகும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள கட்டடங்களின் தரம் மீதான கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகிறது. ஏற்கனவே, நேற்று சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், தற்போது […]
பீகார் : மாநிலம் சரண் மாவட்டத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த பெண் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த பெண் (பாதிக்கப்பட்ட) விகாஸ் சிங் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஹாஜிபூரில் வசிக்கும் அந்த பெண், டாக்டராகவும், மதுராவில் பயிற்சி பெற்று வந்து இருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் மருத்துவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து அவரிடம் பேசி இருக்கிறார். ஆனால், விகாஸ் சிங் மறுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். இறுதியாக கடந்த, திங்கட்கிழமை, இருவரும் […]
பீகார் : பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் உள்ள ஒரு இடத்தில் தந்தையே அவரது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அவரது மகள் ஆதாரத்துடன் வீடியோ பதிவு செய்து போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீடியோவானது வெளியாகி உள்ளது என தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தைக்கு எதிராக இந்த பாலியல் […]
புது டெல்லி : பீகாரில் நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைது செய்யப்படலாம் […]
பீகார் : இன்றய காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒரு சிலர் ரீல்ஸ் மீது இருக்கும் அதிக ஆர்வத்தால் ஆபத்தை உணறாமல் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிர்தப்பிப்பது உண்டு. அப்படி தான் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் மாடியில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த சமயத்தில் மின்னல் தாக்குதலைத் தவிர்த்து காயமில்லாமல் தப்பினார். இந்த சம்பவம், அவருடைய தொலைபேசியில் உள்ள கேமராவில் பதிவாகியது. பீகாரில் கனமழை பெய்து வந்த […]
பீகார் : பீகாரில் இட ஒதுக்கீடு வரம்பை 50%-ல் இருந்து 65% ஆக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் தற்பொழுது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்தது. அதன் விபரங்களை அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, பீகாரில் உள்ள 13.07 […]
பீகார்: இந்தியாவை கல்வி உலகின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம் என நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைகழகத்தின் புதிய கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்று வரும் இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் […]
பீகார்: 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வதேச நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பீகாரில் 5ஆம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைகழகம். சுமார் 800 ஆண்டுகள் பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12ஆம் நூற்றாண்டு அயல்நாட்டினர் படையெடுப்போடு அழிக்கப்பட்டது. 1600 ஆண்டுகள் பழமையான இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று […]
அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரா நதியின் குறுக்கே அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்துள்ளது. இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான என மொத்தம் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்ட பட்ட பாலமானது கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதி […]
வெப்ப அலை : உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அலை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை படி படியாக உயரக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. ஜூன் 13 முதல் ஜூன் 16 வரை கிழக்கு மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்திலும், பீகாரில் ஜூன் 13 வரையிலும் வெப்ப […]
டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]