புது டெல்லி : பீகாரில் நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைது செய்யப்படலாம் […]
பீகார் : பீகாரில் இட ஒதுக்கீடு வரம்பை 50%-ல் இருந்து 65% ஆக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் தற்பொழுது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்தது. அதன் விபரங்களை அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, பீகாரில் உள்ள 13.07 […]
சென்னை: பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்கப்ட்டதால் பள்ளிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் ஓர் தனியார் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். இதுகுறித்து போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அந்த சிறுவன் பயின்று பள்ளி வளாகத்தில் சிறுவனின் உடல் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவன் பள்ளிக்குள் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்ததாகவும், அதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பாட்னா […]
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதில் 7 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
எம்எஸ் தோனியின் பெயர், புகைபடத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதாக பாட்னாவில் 5 பேர் கைது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை தொலைபேசியில் அழைத்து ஏமாற்றியதாக 5 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 2BHK குடியிருப்பில் இருந்து ஒரு (Dhani finance Ltd) என்ற போலி நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் மக்களுக்கு வங்கிக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு மற்றும் KYC புதுப்பிப்புகள் […]
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர். இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மே 11 ஆம் தேதி குழந்தைகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி அளித்தது. அதைப்பற்றி குறிப்பிட்ட நீதி ஆயோக் மருத்துவக்குழு உறுப்பினர், 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த கோவாக்ஸின் மருந்தை 2 மற்றும் 3 ஆம் கட்ட […]
பாட்னாவில் உள்ள இண்டிகோவின் விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங் வயது 42,செவ்வாய்க்கிழமை மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் நெருங்கிய தூரத்திலிருந்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ,இதில் அவரது மார்பில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ,இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
பாட்னாவில் பாஜக ஜெயந்த் பகுதி துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா இன்று காலை பீகார் தலைநகர் பாட்னாவில் அடையாளம் தெரியாத சில கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் சீதா ராம் திருமண மண்டபத்தில் நடந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இது குறித்து, பாட்னா பகுதியின் காவல் துறை கூறுகையில், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம் என […]
பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் இன்று கூறியுள்ளது. இந்நிலையில், DRDO பாட்னாவிலும், முசாபர்பூரிலும் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா Makeshift மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது என்று […]
பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15-ம் தேதி பீகார் தலைநகரான பாட்னாவில் உள்ள பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டே நாட்களில் திடீரென மணமகன் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலே மணமகன் உடலை தகனம் செய்துள்ளனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என்பதை […]
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்ட் சந்திரா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பாட்னாவில் மொகாமாவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருந்தவர் கே. சந்திரா. 68 வயதான இவர் 2012ல் ஓய்வு பெற்றார்.கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டான (டிஎஸ்பி) இவர் மித்ரமண்டல காலனியில் உள்ள கோயிலில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இது குறித்து டிஎஸ்பி புல்வாரிஷரிப், சஞ்சய் குமார் பாண்டே ஆகியோர் […]
திருப்பூரில் இருந்து பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூரில் நேற்று 1140 தொழிலாளர்களுடன் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.
ப்ரோ கபடி லீக்கின் 6வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த கபடி லீக்கில் மொத்தம் 12 அணிகள் மொத உள்ளன. இதில் இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோத உள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு […]
பாட்னா-மொகாமா பயணிகள் ரயில் நேற்று இரவு மொகாமா ரயில்நிலைத்திற்கு வந்தது. அதன்பின்னர், அங்கு பயணிகளை இறக்கி விட்டு யார்டுக்கு சுத்தம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலின் பெட்டிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடிய போதும், எஞ்சினுடன் நான்கு பெட்டிகளும் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்துவிட்டன. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு ரயில் தடம் புரண்டதில் விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பயணிகள் யாரும் இல்லாதால் […]