சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு!
சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை என அறிவிப்பு.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, போராட்டம் நடத்தினர். மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, வீடியோக்களை பகிர்ந்ததாகக் கூறப்படும் 23 வயது சிம்லா இளைஞன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் வெளியானதாகக் கூறப்படும் பெரும் போராட்டங்களை அடுத்து சண்டிகர் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுமுறையை சனிக்கிழமை வரை நீட்டித்துள்ளது. அதன்படி, சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீடியோ கசிவு வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் அழுத்தம் கொடுத்ததையடுத்து விடுதி வார்டனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.