72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை.
இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபலங்கள் இல்லை, அவரை பற்றி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாத டிவி சேனல் இல்லை எனும் அளவிற்கு இன்று ரஜினிகாந்த் தினமாக மாறிவருகிறது.
இப்படி பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நம்ம பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்காமல் விடுவாரா? அவரும் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவர் பதிவிட்ட டிவிட்டர் குறிப்பில், ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் ஜி. உங்களது திரைப்படங்களும், உங்களது அற்புதமான நடிப்பும் மக்களை ஊக்கப்படுத்தட்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் தரவேண்டும்.’ என தனது பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
unknown node