பீகார் :பீகாரில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ், இன்று புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், தேர்தல் ஆணையம் உடனடியாக வாக்காளர் பட்டியலில் இருந்து தேஜஸ்வியின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டு அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கேள்விகளை எழுப்பிய தேஜஸ்வி, எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறினார். நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்?
தேர்தல் செயலியைக் காட்டி, தனது EPIC எண்ணைத் தேடும்போது வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று கூறியிருக்கிறார்.இதனையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேஜஸ்வியின் பெயர் 416 என்ற எண்ணில் அவரது புகைப்படத்துடன் உள்ள வாக்குச் சாவடிகளின் பட்டியலை ஆணையம் வெளியிட்டது. எனவே, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவின் கூற்று தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
