டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல், அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, வாக்காளர்களுக்கு சேவைகளை எளிமையாக்கவும், தாமதங்களை குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிமுறைகளின் கீழ், விண்ணப்பங்கள் ஆன்லைனில் (https://voters.eci.gov.in/ அல்லது […]
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ , அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, வைகோ, அன்புமணி, எம்.எம் அப்துல்லா, வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த தேர்தலுக்கு ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் […]
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவை) காலியாக உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், இந்த இடைத்தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மேலும் பல கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது குறித்து […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில், பாஜக தலைமையகம் முதலமைச்சர் பதவிக்கான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் தான். இப்போது, பிரதமர் மோடி சுற்று பயணங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில், பாஜக மேலிடம் விரைவில் முதலமைச்சர் […]
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் […]
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதனையடுத்து, 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இன்னும் ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டும் மக்கள் வாக்குகளை […]
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் […]
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சமீப நாட்களாக, கூட்டணி கட்சி தொடர்பான தகவல் பரவி வந்தது. அந்த தகவலின்படி, அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க […]
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். “I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். […]
சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11. 11 சதவீத வாக்குகள் பதிவானது. இதை தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும், தற்பொழுது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகப்டசமாக, கிஷ்த்வாரில் 56.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 29.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன. Jammu and Kashmir 1st […]
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 7 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 3276 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் (காலை 11 மணி நிலவரப்படி) 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் […]
காஷ்மீர் : கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அது முன்னர் வரையில் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 6 ஆண்டுகள் பதவிக்காலமானது, பின்னர் வழக்கமான 5 ஆண்டுகால ஆட்சி முறையாக மாறியது. இந்த நடைமுறைக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014இல் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் […]
அமெரிக்கா : இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் முக்கிய நேரடி விவாதம் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே பென்சில்வேனியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது நிபுணர்களும் வாக்காளர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் […]
Election Commission: தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Read More – எம்.எல்.ஏவாக தொடரும் பொன்முடி..! திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை என அறிவிப்பு மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 27 பேர் […]
நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி […]
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு கடைசியாக கடந்த ஆண்டு 2016 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சந்தனமரங்கள் தான் இந்த மாவட்டத்தில் பெரிய வருவாயை ஈட்டி கொடுத்தது. வீரப்பன் மீது அநியாயமாக பலி போட்டார்கள். அவர் அந்த காட்டில் இருந்தவரை ஒருவனும் காட்டிற்குள் செல்லவில்லை. அவர் இருந்திருந்தால், இன்றைய காவேரி நிலை வந்திருக்காது. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் மீது வீணாக பழி சுமத்தினர். நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? என கலகலப்பாக பேசியுள்ளார். […]