மோடியே மீண்டும் பிரதமர்…..டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட தகவலில் 84 % பேர் ஆதரவு…!!

Default Image
  • மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டுமென்று கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
  • டைம்ஸ் ஊடக குழுமம் இணையதள வாயிலாக நடத்திய கருத்து கணிப்பில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டுமென்று 84 % பேர் தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் ஊடக குழுமம் இணையதளம் வழியாக கடந்த 11ம் தேதி 20 ஆம் தேதி வரை 2 லட்சம் பேரிடம் அடுத்த பிரதமர் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.இதில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்கும் நடைமுறை தவிர்க்கப்பட்டு இருந்தது.இந்த கருத்து கணிப்பின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டுமென்று  84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் ராகுல்காந்திக்கு 8.33 சதவீதம் பேரும் , மமதா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பெரும் வாக்களித்துள்ளனர்.மேலும் மோடியின் ஐந்தாண்டு ஆட்சி மிகச் சிறப்பாக இருப்பதாக 55.51 சதவீதம் பேரும் , சிறப்பாகஇருப்பதாக 22.29 சதவீதம் பேரும் , மோசமாக இருப்பதாக 9.94 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

அந்த கருத்து கணிப்பில் நலத் திட்டங்களை கொண்டு வந்தது மோடி அரசு மிகப் பெரிய சாதனை என்று 34.39 சதவீதம் பேரும் , ராமர் கோவில் கட்டப்பதத்து மிகப்பெரிய தோல்வி என்று 35.2 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்