மக்கள் பணத்தை அவரின் கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார்..ராகுல் குற்றச்சாட்டு...!!

பொது மக்களிடம் உள்ள பணத்தை தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பொது மக்களிடம் உள்ள பணத்தை தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு  நடைபெற்றது.இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய சரத்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி 500 , 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து மக்களுடைய பணத்தை மோடி அவரின் கார்பரேட் நண்பர்களுக்கு கொடுத்து விட்டார். பிரதமர் மோடி  பணக்காரர்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த மாநாட்டில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.