பெங்களூர் :தன்னுடைய ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் 30 ரூபாய் விட்டு சென்ற நிலையில் அதை வீடு தேடி சென்று ஆட்டோக்காரர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியாயம், நேர்மை, அறம் எல்லாம் இன்று செய்திகளில் எழுதித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அரிதான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர், தனக்கு நடந்த அனுபவத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. நியாயமுள்ள ரேட்டுக்காரன் என்ற பாடலின் வரி ஆட்டோக்காரர்களுக்குப் பொருந்தும் […]
சென்னை: கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக எழுந்த விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி கொடுத்துள்ளார். கலக்கு போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற பெயருடன் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும்மல்ல, அவர் தற்போது மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றி […]
UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர். யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், […]
பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்கள் அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்களை அறிவித்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 பணம், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில், மது வாங்க பணம் தராததால் தனது 75 வயது தாயை தீ வைத்து கொளுத்திய நபர் கைது. கேரளாவின் திருச்சூரில் 55 வயது நபர் ஒருவர் மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால் 75 வயதான தனது தாயை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபானம் வாங்குவதற்கு பணம் தர மறுக்கும் போது அந்த நபர் தனது […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 77.02 ஆக இருந்தது. அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கடந்த வாரம் 76.22 ஆக இருந்தது.
அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து […]
மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில […]
டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என பாஜக எம்.பி அக்ஷய்வர் லால் கோண்ட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்தரபிரதேச மாநிலம் பரைச் தொகுதி பாஜக எம்பி அக்ஷய்வர் லால் கோண்ட் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகள் அல்ல, அவர்கள் சீக்கியர்கள் […]
ஏ.டி.எம்-இல் தவறவிடும் வைஃபை கார்டுகளை பயன்படுத்தி பல்லாயிரங்களை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகரா. இவர் அங்கு இருக்கக்கூடிய ஏ.டி.எம். சென்றுவிட்டு திரும்பும் போது தவறுதலாக அவருடைய வைஃபை கார்டை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த வைஃபை கார்டில் 25,000 பணம் எடுத்திருப்பதாக மனோகராவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் விசாரணை […]
30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் தர்மம் எடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து 2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குடிசையில் வசித்து வரக்கூடிய பெண்மணி ஒருவர் தர்மம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண்மணியை அழைத்து செல்வதற்காக நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் அவரது வீட்டிற்கு அப்பெண்மணியை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர். மேலும், அவரது குடிசையிலிருந்து […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைமைப்பான சிஏஐடி (CAIT) ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா […]
ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி. நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை மிகவும் பாசத்துடன் வளர்ப்பதுண்டு. ஆனால் இந்த செல்லப் பிராணிகளால் சில நேரங்களில் நமக்கு இழப்பீடுகள் கூட ஏற்படுவது உண்டு. அந்த வகையில் ஆஃப் மேன் நாட்டை சேர்ந்தவர் ஜோஸலின். அவர் தனது படுக்கையின் ஓரத்தில் ஒரு சிறிய பானை ஒன்றை வைத்து, அதில் தான் மிச்சப்படுத்திய பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது செல்லப்பிராணியான பெக்கி, அந்த பானையிலிருந்து 100 டாலர் (ரூ.9,800) பணத்தையும் […]
நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம். நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேறுமாம். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் உள்ளது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை தான். அதிலும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் […]
வேலூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் கிடைத்த ரூ.5,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சோமு என்பவர் அங்குள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது இயந்திரத்தில் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த அதிகாரி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். அந்த பேக்கரிக்கு வந்த சில இளைஞர்கள் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் காசு கேட்டதால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் பேக்கரி ஊழியரை சரமாரியாக அடித்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில், பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. […]
தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. […]
இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகக் கூறி போலி அடையாளத்தை காட்டி ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். இதை நம்பி பாலமுருகன் என்பவர் பைக்கை வாங்குவதற்கு முயன்று கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாக மோசடி செய்த போலி ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். இதை அவர் உட்பட 8 பேரை ஏமாத்தியுள்ளார் என தெரிய வந்தது. ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் […]
அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த டேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர். அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார். அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை […]
நாங்குநேரி தொகுதியில் உள்ள மூலக்கரை பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவினர் வீட்டை வாடகைக்கு எடுத்து பணப்பட்டுவாடா செய்ததாக ,அதற்கு ஏற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்தததாகவும் கூறிப்படுகிறது. அப்பொழுது பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட திமுகவினர் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் நாங்குநேரியில் முறைகேடாக […]