மகாராஷ்டிராவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் !

Default Image

 

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளனர். உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவல் குணமடைந்த நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அப்போது அவருடைய ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்து மற்றொரு நோயாளியின் ரத்தத்தில் சேர்க்கும் போது குணப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெறிவித்துள்ளனர். தற்போது மகாராஷ்டிராவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்