தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை!

உத்திரபிரதேசத்தில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்த கோவிலுக்கான கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் பூஜைகள் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கருவறையில் 51 அங்குலம் குழந்தை ராமர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் விழா : கலந்து கொள்ளும் தமிழக பிரபலங்கள் யார்?
அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த ஏற்கனவே அனுமதி கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைக்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான விழாவின் நேரலைக்கு போலீசார் தடை விதித்ததாக கூறி விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. இதில், தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் கோயில் LED திரை.., வயிற்றில் அடிக்கும் திமுக.! நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!
ஏற்கனவே, ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பு செய்ய தடைவிதித்ததாக கூறி தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால், தமிழக அரசு அதிகாரபூர்வமாக எந்த இடத்திலும் நேரடி ஒளிபரப்புக்கு தடை, சிறப்பு பூஜைகளுக்கு தடை விதிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை.
அறநிலையத்துறை கோயில்களில் நேரலை, பூஜை செய்ய கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்றும், கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025