அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். இந்நிலையில், மலையாளத் திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் படங்களைத் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், […]
உத்திரபிரதேசத்தில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்த கோவிலுக்கான கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் பூஜைகள் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கருவறையில் 51 அங்குலம் குழந்தை ராமர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் விழா : கலந்து கொள்ளும் தமிழக பிரபலங்கள் யார்? அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு […]
உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று திறக்கப்படவுள்ளது. கோவிலின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கிறார். கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவில் அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. […]
அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவில் நான்கு சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா சனாதன தர்மத்தை மீறி நடப்பதால், ஜனவரி 22ம் தேதி மிக முக்கியமான இந்து மத குருக்களான சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இந்து மதத்தின் […]