மக்களவை தேர்தல் : அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இன்று பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

this news given information about Lok Sabha election: BJP nominee Smriti Irani today nominated Rahul Gandhi in Amethi constituency

இன்று அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி  வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது.அதேபோல் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்  மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

unknown node

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன்  சோனியா காந்தி, அவரது சகோதாரி பிரியங்கா காந்திமற்றும் பிரியங்காவின் கணவர் ராபட் வாதோரா சென்றனர்.

இந்நிலையில் இன்று அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி  வேட்புமனு தாக்கல் செய்கிறார்.இவருடன் உத்திர பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. அமேதியில் 5-ம் கட்டமாக மே 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.