522 நாட்களுக்குப் பிறகு…கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக குறைவு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,37,307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,63,530 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,376 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,37,859 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.26% ஆக அதிகரிப்பு.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,35,918 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.522 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,12,01,03,225 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 57,43,840 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.