#BIG NEWS! லடாக் தாக்குதல்.! இந்திய வீரர்கள் 20 பேர் பலி.!? சீனா தரப்பில் 43 பேர்.!?
லடாக் எல்லைபகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், சீன ராணுவம் தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், லடாக் எல்லையில் இந்திய – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.