லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர். இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WATCH | Leh, Ladakh | On the agreements […]
டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, ஜான்ஸ்கார் (Zanskar), ட்ராஸ் (Drass) , ஷாம் (Sham), நுப்ரா (Nubra), சாங்தாங் (Changthang) ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று […]
கார்கில் : 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25ஆம் ஆண்டு கார்கில் நினைவு தின கொண்டாட்டம் காஷ்மீர் முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர், கார்கில் மாவட்டத்தில் டிராஸ் எனுமிடத்தில் நடைபெற்று வரும் ராணுவ நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். […]
லடாக்: இந்திய ராணுவ எல்லையான லடாக், தௌலத் பேக் ஓல்டி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது டி-72 ரக ராணுவ டேங்க் உடன் அப்பகுதி ஆற்றை கடக்க ராணுவ வீரர்கள் முயற்சித்துள்ளனர். அந்த சமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் துரதிஷ்டவசமாக ராணுவ டேங்க் வெடித்ததில் அதில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் உயிரிழந்தனர் என […]
கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது மூன்று வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனி தீர்ப்பு நீதிபதி கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா தனி தீர்ப்பு மற்றும் நீதிபதி கவுல் தனி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது […]
இந்திய சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் இந்திய சட்டங்கள் அங்குள்ள சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அந்த சட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன. இதனை கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது […]
கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே எனும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, லடாக்கிலுள்ள லே எனும் பகுதியில் கதர் துணியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும், 1000 கொண்டது என கூறப்படுகிறது. காலையில் நடைபெற்ற தேசிய கொடியை நிறுவும் நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், […]
லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ படை தயார் நிலையில் உளது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தகவல். லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவ படையை குவித்து வருவதாக இந்தியா குற்றசாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ படைகளை நிலைநிறுத்தி உள்ளது. இதனால் இந்தியா – சீனாவு விவகாரத்தில் […]
கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை செய்துள்ளனர். இந்தியா மற்றும் சீனப் படைகள் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் தாக்குதல் ஒத்திகை நடத்தி வருகின்றனர். குறிப்பாக லடாக் பகுதியின் கிழக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கி வைத்து தாக்குதல் ஒத்திகை நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள […]
கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபடவில்லை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் நமது படைகளோ , சீனப் படைகளோ அத்துமீறிவில்லை என இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன படையினர் அத்துமீறியதாகவும், இந்திய படைகள் குவிக்கப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இடையில் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபடவில்லை. சர்ச்சைக்குரிய பகுதியை தாண்டி இந்திய படைகளும் செல்லவில்லை எனவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரியில் சர்ச்சைக்குரிய இடத்தில் […]
பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சீனாவிடம் கொடுத்துவிட்டார் என்று ராகுல் காந்தி கேள்வி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அவைகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில்,எல்லையில் பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசினார். இந்நிலையில் […]
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடுத்துள்ளது. சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. அதாவது ரோந்து பணியின்போது எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்ததை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவ முயற்சியை கைவிடாததால் ஏற்பட்ட இருதரப்பு தள்ளுமுள்ளில் 20 சீன வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் அந்த சமுக வலைதள நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் […]
லடாக்கில் உள்ள சுமர்-டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து சென்றபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் பிடிபட்டார். அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தாரா..? அல்லது உளவு பார்க்க வந்தாரா.? ஏன் இந்திய பகுதிக்கு வந்தார்..? எப்படி வந்தார்..? என இராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த, சீன வீரரிடம் ஆயுதம் இல்லை எனவும், அவரிடம் சீன இராணுவத்தின் அட்டை அடையாளத்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் அவர் சீன இராணுவத்திற்குத் திரும்புவார் என கூறப்படுகிறது.
லடாக்கில் இன்று அதிகாலை 4:44 மணிக்கு லேசான நிலநடுக்கம் காணப்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம், மற்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. லடாக்கில் இந்த மாதத்தில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Royal Enfield பைக்கில் லடாக்கிற்கு பயணம் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணத்தினால் சுற்றுலா செல்ல முடிவெடுத்த நடிகை மாளவிகா மோகனன் இளைஞர்களின் கனவு உலகமான ‘லடாக்’ பகுதியை தேர்வு செய்துள்ளார். பொதுவாக, லடாக்கிற்கு பயணம் செய்ய இளைஞர்கள் தான் அதிகம், அதிலும், குறிப்பாக பைக்கர்ஸ் ஆவலோடு காத்திருக்கின்றன. ஏன்னென்றால் அந்த அளவிற்கு அந்த பகுதி அழகாக […]
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லே தலைநகர் லடாக்கில் ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.இந்நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த ஒரு வாரத்தில் லடாக்கில் 2வது முறையாக ஏற்படும் நிலநடுக்கம் இதுவாகும். லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இன்று பிற்பகல் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது லடாக்கின் லேவில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்துடன் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை, ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் இதே போல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் லே பகுதிக்கு ராணுவ தளபதி நரவனே சென்றடைந்தார். இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு […]