ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை.! – உள்துறை அமைச்சகம் அதிரடி.!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மாநில அரசு தீவிரமாக அமல்படுத்த உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.