சென்னை: டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை அமைச்சக வளாகத்தில் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Birth Registration: பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிப்பு. குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது அந்த குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற […]
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது. நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.! அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட […]
2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு ( NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹரியானாவில் இன்று தொடங்கிய ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.2 நாட்கள் நடக்கும் இம்முகாமில் அமித்ஷா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். ஒன்பது மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் அல்லது அனைத்து மாநிலங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து […]
கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்கள் சமூக வளைதளத்தில பகிர வேண்டாம்.பகிர்வு இணைய மோசடிக்கு வழிவகுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை. இந்தியா கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. மேலும் சில மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்பைக் கனிசமாக குறைத்து வருகின்றனர், அதில் […]
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் கங்கனா ரனாவத். மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்தது சர்ச்சை ஆன நிலையில், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து சிவசேனா […]
காலிஸ்தான் ஆதரவாளர்கள் 9 பேரை தீவிரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்ட்டுள்ளனர். இந்த 9 நபர்களும் எல்லையைத் தாண்டி மற்றும் வெளிநாட்டுகளி லிருந்து பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதும் பரவிய பெருந்தொற்றாக மறியது. இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருக்கும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் […]
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மாநில அரசு தீவிரமாக அமல்படுத்த உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்துள்ளவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள வாடகை வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், […]
மத்திய அரசானது குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்தியாவில் குடியேறிய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களில் முஸ்லீம்கள் தவிர இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என ஏனைய மதத்தை […]
தற்போது உலகம்மெங்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உருவாகிறது. ஆதலால் ஒரு மாநிலத்திலிருந்து ஐநூறு மாநிலத்திற்கு முதலமைச்சர் செல்லும் முன் அந்த மாநிலத்தின் முதல்வருக்கு தகவல் சொல்லி பாதுகாப்பு அனுமதி பெற்ற பிறகே மற்றொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.’ என குறிப்பிடபட்டுள்ளது. […]
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்த தேசிய தொலைதொடர்பு அமைச்சர் ஜெனரல் சஞ்சய் குமார் அவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, இன்னும் பல அணிகள் தற்காலிகமாக கைவசம் வைக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் […]