குஜராத் துறைமுகத்தில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன.
முந்த்ரா துறைமுகத்தில் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை(ஏடிஎஸ்) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) நடத்திய கூட்டு சோதனையின் போது ₹350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக துணி ரோல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கடத்தல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து அனுப்பப்பட்டு பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று குஜராத் காவல்துறை தலைமை இயக்குனர் ஆஷிஷ் பாட்டியா தெரிவித்தார்.