ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

Hemant Soran

ஜார்கண்ட் : நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் 14-வது முதல்வராக பதிவியேற்றுள்ளார். அதில், இவர் 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

81 உறுப்பினர்களைக் கொண்டு ஜார்கண்ட் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தலானது நடைபெற்றது. இதில், 56 இடங்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்றது.

ராஞ்சியில் இன்று மாலை 4மணி அளவில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில், ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கேங்வார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, சிபுசோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானேர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குறிப்பாக தமிழக துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today
rain thunder
Kane Williamson
PM Modi
FisherManRescue
Hemant Soran
Balachandran