பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு!

The Governor of Tamil Nadu met the Prime Minister on the appointment of banwarilal purohit by additional charge of Punjab, Chandigarh.

பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமரை சந்தித்த தமிழக ஆளுநர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பும், சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் தமிழகம், பஞ்சாப், சண்டிகர் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார். பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.