பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த […]
சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பன்வாரிலாலை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர். தமிழக ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 8:30 மணிக்கு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன் என வைகோ கூறியுள்ளார். நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, […]
பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமரை சந்தித்த தமிழக ஆளுநர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பும், சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் தமிழகம், பஞ்சாப், சண்டிகர் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது டெல்லியில் பிரதமர் […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். ஆளுநர் அவர்கள், ரிப்பன் அகற்றி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், குமிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க […]
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,குடியரசு தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் […]
பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் சென்று இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஆளுநர் இன்று பிரதமரை சந்திக்கிறார். இந்நிலையில் மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் […]
நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும் என இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 16 வது புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டம் இன்று அண்ணா கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. இந்த சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையாற்றுகிறார். அதில் பேசிய […]
மாலை 5:30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சந்திப்பு. இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன்,சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகல் செல்ல […]
கொரோனா நிவாரண நிதியாக ஆளுநர் பன்வாரிலால் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார். ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க கிண்டி ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கொரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ஒரு கோடி வழங்க உள்ளதாகவும் , ஆளுநர் வழங்கும் நிதியை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகிஉள்ளது. அதே நேரத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமையைப் பெறவுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற […]
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் ரஞ்சன் ஆளுநரிடம் விளக்குகிறார். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.கொரோனா அதிகரித்து வருவது மற்றும் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்தும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் விளக்கவுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் போன்ற அரசியல் பிரபலங்களும் காந்தியின் […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நாளை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்.,24ந் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செப்.30-ம் தேதியோடு 8 கட்ட ஊரடங்குகள் முடிவடைந்தது. அக்.1ந்தேதி 9ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடந்த செப்.,1 தேதியுடன் இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டது, பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.அந்த சோதனையில் ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என […]
நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து எனஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மாலை முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்வு நடைபெறும். தற்போது, ஆளுநருக்கு ஏற்பட்ட கொரோனா […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்திப்பதாக கூறிய நிலையில், முதல்வர் தற்பொழுது ஆளுநரை சந்தித்து பேசுகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். மேலும், அவருடன் மூத்த அதிகாரிகள் சிலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து […]
இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4-ஆம் முறையாக ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.