கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகிறார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை.
கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். அங்கு இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பினார்.
இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மீண்டும் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
unknown nodeஅவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் பிரமோத் கார்க் தலைமையிலான மருத்துவ குழுவினர், பாரிக்கரின் உடல்நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவா முதல்வர் பதவியை பாரிக்கர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DINASUVADU