மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் இங்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கடராமனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கடராமன் அவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. தற்போது தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள […]
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி […]
நொய்டாவில் 5 உயிர்களை காப்பாற்றிய 6 வயது குழந்தை ரோலி. நொய்டாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அவர் தலையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரம் காரணமாக கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா 6 வயது சிறுமி ரோலி […]
தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) திட்டம் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018 இல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்து 2019 ஜனவரி 27 இல் அடிக்கல் […]
வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏன் மறுக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். குடம் குடமாக கொட்டும் இந்த கண்ணீரில் சிறு துளியேனும் அனிதாவுக்காகவோ, தனுசுக்காகவோ, கனிமொழிக்காகலோ கசிந்திருந்தால், சற்றேனும் […]
எய்ம்ஸ் ஆய்வில் 50 வயதிற்கும் குறைவானவர்கள் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அளித்த அறிக்கையில், கொரோனாவால் அதிக உயிரிழந்தோர் எந்த வயதினர் என்பதை குறித்த ஆய்வு கடந்த 2020 ஏப்ரல் 4 முதல் ஜூலை 24 வரையிலான காலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் 65 வயதினரை விட 50 வயதினருக்கும் குறைவானவர்களே அதிகமாக இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, மருத்துவமனையில் 654 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 247 […]
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் “தமிழகம் மீட்போம்” என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது வரை இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைந்துள்ளதாக கூறினார். தமிழக […]
எய்ம்ஸ் நிர்வாகிகளாக தகுதியானவர்களை தான் மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டார். மேலும், இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் ,கீழ்ப்பாக்கம் மருத்துவக் […]
பிஜேபியில் பதவியை பெறுவதற்கு அடிப்படை தகுதியே பெண்களை இழிவுபடுத்துவதுதானா? – எம்.பி.ஜோதிமணி மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில், சண்முக சுப்பையா இடம்பெற்றதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்களிடம் ஆபாசமாக நடத்து கொண்ட பாஜகவின் அகில பாரதிய வித்யா பரிசத் தேசிய தலைவர் சண்முக சுப்பையாவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,’ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.மேலும் மதுரையில் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்றார். இதன் பின்னர் அவர் பேசுகையில், மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா […]
கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கிய நபரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. ஹரியானவை சேர்ந்த 28 வயதான ஒரு நபர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு கஞ்சா எதுவும் கிடைக்காத காரணத்தால் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கியுள்ளார். அதனையடுத்து பசியின்மை மற்றும் தீவிர வயிற்று வலியால் ஒன்றரை மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துள்ளனர். எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயிற்றில் […]
இன்று உலகம் முழுவதும் கொரோனா என்றாலே அச்சத்தில் தான் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்த கொரோனா இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவர் சங்கம் சார்பில், சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடகைக்கு குடியிருக்கும் மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாகவும், இதற்க்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அருண் ஜெட்லீ உடல் நலக்குறைவில்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வந்த அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இதனையடுத்து பிரதமர் நரேந்திரமோடி , […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம் என்று தகவல் வெளியாகிவுள்ளது. அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அருண் ஜெட்லீ உடல் நலக்குறைவில்லை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வந்த அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]
கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர்.அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் […]
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய குழுவினரும் மற்றும் ஜப்பானில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினரும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. மாநில அரசிடம் 202 ஏக்கர் இடமும் கேட்கப்பட்டிருந்தது.மத்திய அரசு கேட்டிருந்த நிலத்தை இன்னும் ஓரிரு நாளில் ஒப்படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில்,இன்று ஆய்வு […]