உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டத்தில்.அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்,உலகக்கோப்பையில் பிரான்ஸ் நிகழ்த்திய உற்சாகமான செயல்திறனுக்காக வாழ்த்துக்கள்.அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில் தங்கள் திறமை மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இது மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும், அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் ஆனதற்கும் அவர்கள் தொடரில் அற்புதமாக விளையாடியதற்கு வாழ்த்துகள்.
இதன் மூலம் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
unknown node