பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது.! கங்கனா ரனாவத் பரபரப்பு வீடியோ.!

டெல்லி: சில மணிநேரங்களுக்கு முன்னர் பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கானா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கு பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்த சூழலில், இதுகுறித்து டெல்லி வந்த பிறகு, கங்கானா வீடியோ வெளியிட்டுள்ளார்
அதில் அவர் பேசுகையில், ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நான் தற்போது பாதுகாப்பாக இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன்.
சண்டிகர் விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவம் என்னவென்றால், செக்யூரிட்டி சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த பெண் சிஐஎஸ்எஃப் செக்யூரிட்டி ஊழியர், என் முகத்தில் அடித்தார்கள், அவர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். ஆனால், பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது. அது குறித்து கவலை கொள்கிறேன் என வீடியோவில் கங்கனா தெரிவித்தார்.
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025