டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் “எமர்ஜென்சி”படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கங்கனாவின் மணிகர்னிகா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் முதலில் ஜூன் 14, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், அப்பொழுது கங்கனாவின் அரசியல் பிரச்சாரம் காரணமாக, அவர் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. பின்னர், படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியானது, அதன் பிறகு படம் குறித்து […]
சென்னை : பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் முதல் முறையாக தாமாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘எமர்ஜன்சி’. இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிச் சென்றுள்ளதாக கங்கனா தெரிவித்திருக்கிறார். பல சிக்கல்களால் தணிக்கை சான்றிதழ் இந்த ‘எமர்ஜன்சி’ திரைப்படத்திற்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமாரான ‘இந்திரா காந்தி’ அமலுக்கு கொண்டு வந்த 21 மாத அவசர நிலையை மையக் […]
டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு குழப்பம். இன்னும் அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவ்வபோது தனது சர்ச்சை கருத்துக்களால் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிடுகிறார். சில சமயம் சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது. அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச கலவரத்துடன் ஒப்பிட்டு பேசி சொந்த கட்சி தலைமையே […]
புது டெல்லி: பாலிவுட் நடிகையும் மக்களவை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், தனது மக்களவைத் தொகுதியான ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள மக்கள், தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், “இமாச்சல பிரதேசம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கிறது, எனவே நீங்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, தன்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதி தொடர்பான குறைகளை காகிதத்தில் எழுதிக் கொண்டு […]
பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில் இணைக்கப்பட்டு, பெங்களூருவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியது. கடந்த ஜூன் 7ஆம் தேதி, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின் போது, கங்கனா ரனாவத் மற்றும் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முத்தியதும், குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தை […]
சண்டிகர்: நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக வந்திருக்கையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கங்கனா முன்னதாக, போராடும் விவசாயிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தாகவும், அதனால் பெண் CSIF ஊழியர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில் , தான் நலமாக […]
டெல்லி: சில மணிநேரங்களுக்கு முன்னர் பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கானா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கு பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்த சூழலில், இதுகுறித்து டெல்லி வந்த பிறகு, கங்கானா வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் பேசுகையில், ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நான் தற்போது பாதுகாப்பாக இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். […]
சண்டிகர்: பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார் நடிகை கங்கனா ரனாவத். இவர், இன்று சண்டிகர் விமான நிலையத்திற்கு வருகையில் பெண் CSIF பணியாளர் ஒருவர் கங்கானாவை கன்னத்தில் மறைந்துவிட்டார். இதுகுறித்த முதல் தகவல் அடிபப்டையில், விவசாயிகளை பார்த்து காலிஸ்தானை சேர்ந்தவர்கள் என கங்கனா முன்னர் கூறியதாகவும், அதனால் CSIF வீரர் கங்கனாவை அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Kangana Ranaut […]
மக்களவை தேர்தல் : இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரளாவில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி.எஸ்.சுனில் குமார் போட்டியிட்டார். நடிகை ஜூன் மாலியா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலையில், […]
மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் 5,06,603 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங் 4,32,978 வாக்குளை பெற்ற நிலையில், அவரை விட 73,625 வாக்குகள் அதிகமாக பெற்று கங்கனா ரனாவத் வெற்றிபெற்றுள்ளார். இதைப்போலவே, கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக […]
மக்களவை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இந்தியா கூட்டணி அடுத்த இடத்தில் உள்ளது. இதில், உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி சுமார் 31,000 வாக்குகள் பெற்றுள்ளார். அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் 46 ஆயிரம் வாக்குகள் பெற்று 14 ஆயிரம் வாக்குகள் […]
Kangana Ranaut : நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதைப்போல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]
Kangana Ranaut ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடிய இவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை வசூலிலும் தோல்வியை சந்தித்தது. READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை […]
அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா” படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த […]
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்து கொடுக்க கூடியவர் என்றே கூறலாம். அதைப்போல தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவார். அதனால் ஏதேனும் சர்ச்சைகள் வருமா என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார். மத்திய அரசு தொடர்பான பிரச்னைகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து இவர் அடிக்கடி பேசுவது வழக்கம். மேலும் தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் வாழ்கை வரலாற்று படங்களின் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக […]
சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள் என ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலில் போட்டு நசுக்கினார் எனவும் அவர் […]
தலைவி வெளியான 10 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த இவர்களதை கதாபாத்திரம் […]
தலைவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா […]
தலைவி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா சினிமா வாழ்க்கையிலிருந்து எவ்வாறு அரசியலில் நுழைந்தார் அரசியலில் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு 1991-ல் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றது வரையில் இரண்டு அரைமணிநேர சினிமா ஓட்டத்திற்கு ஏற்றவகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். இந்த […]