கற்பழிக்கும் போது காண்டம் உபயோகப்படுத்துங்கள் கொலைகள் குறையும்! இயக்குனரின் சர்ச்சை பதிவு!
சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர் என நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா என நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தொடர்பாக தெலுங்கு சினிமா இயக்குனர் டேனியல் ஷிரவன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘ கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறும் போது பெண்கள் காண்டம் அல்லது கருத்தடை சாதனங்களை வைத்திருக்க வேண்டும். கற்பழிப்பவர்களின் எண்ணம் கற்பழிப்பது மட்டுமே, அவர்கள் உங்களை கொலை செய்ய வரவில்லை என்பது போல’ அந்த பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு திரைபிரபலங்கள் மட்டும் இன்றி பலரும் அவரை திட்டி விமர்சித்து வருகின்றனர்.