டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மருத்துவமனையில் பொதுமக்களை மிரட்டி வருவதாக, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
unknown nodeஉடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படும் நிலையில், மருத்துவமனையில் நடமாடும் பொதுமக்களை அழைத்து, மனோகர் பாரிக்கர் மிரட்டுவதாக, காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில நிர்வாகி செல்லகுமார் என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
unknown nodeமனோகர் பாரிக்கர் விரைவில் நலமடைய வேண்டும் என தாம் விரும்பும் அதே நேரத்தில், மருத்துவமனையில் அவர் பொதுமக்களை மிரட்டுவதாக, தமக்கு செய்திகள் வருவதாகவும் செல்லக்குமார் கூறியுள்ளார்.
DINASUVADU