சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைச்சரவையில் தற்போது 9 பேர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்தது.சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பொறுப்பேற்றார்.அப்போது முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியுடன் சேர்ந்து வெற்றி பெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு மூத்த தலைவர்கள் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிலையில் தற்போது அம்மாநில அனைத்து அரசு துறைகள் , அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் புதிய அமைச்சர்களை இணைத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் முடிவு செய்தார்.இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் மாநில சட்ட சபையில் கூடுதலாக 9 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்ட புதிய 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் அனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சத்தீஸ்கரில் விரிவடையும் அமைச்சரவை... 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு...!!
சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைச்சரவையில் தற்போது 9 பேர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்